
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரிசி, சமையல் எரிவாயு, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு கலந்துரையாடப்படுவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில், இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதன்போது பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண, ”விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. என்றாலும், உலகச் சந்தையில் காணப்படும் விலை மற்றும் இலங்கையின் டொலர் நிலைமை தொடர்பில் சில தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த நிலைமையின் போது, இறக்குமதியாளர்கள், நுகர்வோர் ஆகியோர் தொடர்பில் ஆராய்ந்து சில தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.