இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீதான குற்றச்சாட்டு தொடர்பில், சிறைச்சாலைக்குள் 23 பேரிடம் இதுவரையில் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில், ஓய்வுப் பெற்ற நீதியரசர்களை உள்ளடக்கிய விசாரணை குழுவொன்றை அமைப்பதற்கு நீதி அமைச்சரினால் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டளஸ் அழகப் பெரும குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
லொஹான் ரத்வத்த தொடர்புபட்டதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாகவும், இந்த விடயம் தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதன்போது குறிப்பிட்டுள்ளார்.