November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மைத்திரி, கோட்டாபய ஆகியோர் மீதான கொலை முயற்சியின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி இல்லை’

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஸ ஆகியோர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கொலை சூழ்ச்சியில் அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தொடர்புபட்டிருக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக நாமல் குமார என்பவரால் வெளியிடப்பட்ட குரல் பதிவுகள் குறித்து அப்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவு பணிப்பாளராக இருந்த நாலக சில்வா கைது செய்யப்பட்டதுடன், அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை சபையில் கூறிய அமைச்சர்,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சிகள் இருப்பதாக நாமல் குமார என்பவர் 2018 செப்டம்பர் 18 ஆம் திகதி மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவுக்கு கொண்டு வந்து அது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சட்ட ஆலோசனைகளை கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.