July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோதுமை, பால்மா, சீமெந்து நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!

பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலையை அதிகரிப்பது தொடர்பில், அவற்றை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் நிபந்தனைகள் நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் விதிக்கப்பட்டவை என்று குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசிய  பொருட்களின் விலையை அதிகாரிக்காமல் நுகர்வோரைப் பாதுகாக்கின்ற உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த உடன்படிக்கையில், விலை அதிகரிப்புக்குப் பின்னர், பொருட்களை தடையின்றி சந்தைக்கு வழங்குதல், நாளாந்த விநியோகம் தொடர்பிலான அறிக்கையை நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்தல், விலை அதிகரிப்பு செய்து மூன்று மாதங்கள் வரை மீண்டும் விலையை அதிகரிப்பைக் கோருவதைத் தவிர்த்தல் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆறு மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்துக்கு டொலரில் கொடுப்பனவை செய்வதை தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.