July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டியிருப்பதால், பொது மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களில் விரைவில் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு 3 வது டோஸ் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டால் 1 வது மற்றும் 2 வது டோஸ் தடுப்பூசிகள் வழங்குவது மட்டுப்படுத்தப்படும் என்று சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

எதிர்காலத்தில் பிரதான தடுப்பூசி மையங்களில் மட்டுமே தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

3 வது டோஸ் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டால், 1 வது மற்றும் 2 வது டோஸ் மட்டுப்படுத்தப்படும் என்றும் சுகாதார சேவைகளின் பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

அத்தோடு, நாடு மீண்டும் திறக்கப்பட்ட பிறகு மக்கள் கொவிட் தொற்றுக்கு எதிரான சுகாதார நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே இன்று (21) பெருந்தோட்டப் பகுதிகளில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் தொடங்கியது.