இலங்கையில் அவசரகால விதிமுறைகள் தொடர்வதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுமதிக்காது என்று கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் சிவில் நிர்வாகத்தில் இராணுவமயமாக்கம் இடம்பெறுவதை தாம் அனுமதிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் செயற்பாடுகளில் அவசரகால விதிமுறைகள் பங்களிப்பு செய்துள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, நாட்டை மீண்டும் திறக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற ஜனநாயகம் உள்ள ஒரு நாட்டின் சிவில் நிர்வாகத் துறையில் இராணுவமயமாக்கம் இடம்பெறுவது ஒரு சிறந்த நிலை அல்ல என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.