May 4, 2025 15:55:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

க.பொ.த. உயர்தரப் பரீட்சை குறித்து கலந்துரையாடல்!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பாடங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படாதிருப்பது தொடர்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து, ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.

பாடங்கள் பூர்த்தி செய்யப்படாமை குறித்து மாணவர்கள் சிலர் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும், இது குறித்து கல்வி அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இதன்போது பதிலளித்த கல்வி அமைச்சர்,  ”இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பரீட்சைகள் ஆணையாளருடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன” என்றார்.