
file photo: Power Ministry
இலங்கையின் கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
கெரவலபிடிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதமான பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
குறித்த பங்குகளை விற்பனை செய்வதற்கான ஆரம்ப கட்ட ஒப்பந்தத்தில் நிதி அமைச்சு கையொப்பம் இட்டுள்ளது.
இந்த விடயம் ஆளும் கட்சியினுள் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதோடு, பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளனர்.