
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணியளவில் கூடிய போது, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார்.
மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்ற அஜித் நிவாட் கப்ரால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற ஆசனத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்திருந்தது.
இதன்படி அவர் இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இதற்கு முன்னரும் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவி வகித்த நிலையில், பஸில் ராஜபக்ஷவுக்கு தனது ஆசனத்தை வழங்கி கடந்த ஜுலை மாதத்தில் அவர் பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.