File Photo
இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், விரைவில் புதிய எரிவாயு நிறுவனமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இந்த ஆண்டின் இறுதியில் ‘லங்கா கேஸ்’ என்ற பெயரில் புதிய உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த எரிவாயு நிறுவனம், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்த நிறுவனமாக ஆரம்பிக்கப்படும் எனவும், தற்போது சிபெட்கோவிடம் தேவையாள அளவு எரிவாயு கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நிறுவனத்தின் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதோடு, இதன்மூலமாக எதிர்காலத்தில் நாட்டின் 20 சதவீத எரிவாயு தேவையை பூர்த்திசெய்ய முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.