
கொழும்பில் உள்ள மூன்று அரச காணிகளை 99 வருட குத்தகைக்கு வழங்க நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்காக குறித்த காணிகள் குத்தகைக்கு வழங்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கொழும்பு டிஆர் விஜேவர்தன மாவத்தையில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டப இடம், மக்கள் வங்கியின் குயின்ஸ் கிளை, சதொச களஞ்சியசாலை கட்டடத் தொகுதி ஆகியனவே இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த இடங்களில் திட்டங்களை மேற்கொள்வதற்கு முதலீட்டாளர்களிடம் இருந்து திட்ட முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.