
தண்டனைக் குறைப்பை வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 10 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் முதல் சிறைச்சாலையின் கூரை மீதேறி அவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுள் தண்டனை கைதிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளை கூரையில் இருந்து கீழே இறக்கும் முயற்சியில் சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.