
இலங்கையில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
சுற்றறிக்கைக்கு அமைய கடமையில் உள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலயக் கல்விப் பணிப்பாளரின் ஊடாக குறித்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளலாம்.
சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை கடமையில் உள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் கடமையில் இருக்கும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு பாடசாலைகளுக்கு வலயக் கல்விப் பணியகத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடமையில் ஈடுபட்ட அதிபர்களுக்கான கொடுப்பனவை வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர் மற்றும் ஆசிரியர் சேவைகளை, மூடிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.