April 30, 2025 18:31:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போட்ஸ்வானாவின் இளம் அழகியாக இலங்கைப் பெண் தெரிவு

தென் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவின் இளம் அழகியாக கிம்ஹானி பெரேரா என்ற 17 வயது இலங்கைப் பெண் மகுடம் சூடியுள்ளார்.

‘Miss Teen International Botswana 2021’  இளம் அழகிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றுள்ளது.

இதில் போட்ஸ்வானாவின் ‘பிலிக்வே’ மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையைச் சேர்ந்த கிம்ஹானி பெரேரா பங்குபற்றியிருந்தார்.

42 போட்டியாளர்கள் பங்குகொண்ட இந்தப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு 14 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதன்படி, இந்த ஆண்டுக்கான போட்ஸ்வான இளம் அழகியாக மகுடம் சூடிய கிம்ஹானி, இந்தியாவில் நடைபெறவுள்ள ´Miss Teen International´ போட்டிக்கு தகுதிபெற்றுக்கொண்டார்.

கிம்ஹானி பெரேராவின் தந்தை இந்திக பெரேரா, 1990 முதல் போட்ஸ்வானாவில் ஒரு வியாபாரியாக தொழில் புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.