
ஐநா பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸைச் சந்தித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு, நியூயோர்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
ஐநா பொதுச் சபையின் கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
அரச தலைவர்களுக்கான ஒன்றுகூடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் உரையாற்றவுள்ளார்.