January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலிக்கடாவாக்க ஒருபோதும் தயாராக இல்லை’

பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்தே மனித உரிமை பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் முகங் கொடுத்து வருகிறது.இந்த நெருக்கடிகள் ஒன்றும் எமக்கு புதிதல்ல. இப்போது இந்தப் பிரச்சினையும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.எனினும் நாங்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்வோம் என ஆளுந்தரப்பு பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பிரச்சினைகள் இன்று நேற்று வந்ததல்ல.இந்த நாட்டில் எப்போதும் இருந்து வரும் விடயம் அது.பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்து இந்த மனித உரிமை பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் முகங்கொடுத்து வருகிறது. அது ஒன்றும் புதிதல்ல.

இப்போது இந்தப் பிரச்சினையும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.நாங்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்வோம்.அரசு தேசிய பாதுகாப்பை எதற்காகவும் விட்டுக் கொடுக்காது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.யார் என்ன செய்ய திட்டம் தீட்டினாலும் முயற்சித்தாலும் அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.எங்களை விட முன்னேற்றமடைந்த நாடான நியூசிலாந்தில் என்ன நடந்தது.இலங்கையிலிருந்து சென்ற ஒருவர் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தை போல், நமது அரசும் தேசிய பாதுகாப்பை பலிக்கடாவாக்க ஒருபோதும் தயாராக இல்லை.தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நான் அதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.