இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.
ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, கடந்த வாரம் இத்தாலி சென்றிருந்தார்.
பிரதமருடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினரும் சென்றிருந்தனர்.
இந்நிலையில் இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.