
ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய, பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில்,அவரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.