January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க அதிபர்கள் சங்கம் தீர்மானம்

மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பப் பத்திரங்களை மாத்திரம் அனுப்பி வைப்பதற்கு அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறித்த விண்ணப்ப பத்திரங்களை எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் அனுப்பி நிறைவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை அனுப்புவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு க.பொ.த உயர்தர மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தன.

அதன்படி, 249,841 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கும், 243,704 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கும் விண்ணப்பித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.