February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழக மாணவன் இளங்குன்றனின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவு!

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் மரணம் தொடர்பில் முன்கூட்டியே இரண்டரை மணித்தியாலத்தியாலத்திற்கு முன்பாக தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த இளங்குன்றன், தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில்,  2020 நவம்பர் 17 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் தற்கொலை எனும் ரீதியில் விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.

ஆனால், இச்சம்பவத்தில் மரணமடைந்தமை தெரிய வருவதற்கு முன்பதாக, இரண்டரை மணித்தியாலங்களுக்கு முன்னர் அவர் மரணமடைந்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிசாருக்கு தெரிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு, மாணவனின் பெற்றோரால் இந்த விடயம் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. .

இதனைத் தொடர்ந்து இறந்த விடயம் தெரிய வருவதற்கு முன்பாக இறந்தமை தொடர்பில் தகவல் வெளியானமை தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறும், அது தொடர்பில் பிரதமர் அலுவலகத்திற்கு அறிவிக்குமாறும் பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.