இலங்கை மீது பயணத்தடை விதித்துள்ள நாடுகளுடன் அதனை நீக்குவதற்கு இராஜதந்திர மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாட்டில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 50 வீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு நாட்டில் கொவிட் தொற்று எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
இவ்வாறான நிலைமையில் நாட்டுக்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக் கூடிய ஆரோக்கியமான நிலைமை உருவாகி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.