யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் ‘கனலி’ சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு நிகழ்நிலை வெளியினூடாக இடம்பெற்றது.
மாணவர் சஞ்சிகையை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா வெளியிட்டு வைத்துள்ளார்.
ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி.ரகுராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலைப்பீடப் பீடாதிபதி கலாநிதி க. சுதாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
வரவேற்புரையை மாணவி அ. சங்கீர்த்தனாவும், வழிகாட்டுநர் உரையை ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலனும் நன்றியுரையை மாணவி அ.ரோகிணியும் நிகழ்த்தினர்.
பெருந்தொற்றுக் கால சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் நிகழ்நிலை இணைப்பினூடாகக் கலந்துகொண்டனர்.
ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் செய்திக் கட்டுரைகள், நேர்காணல்கள், பதிவுகள் போன்ற பல ஆக்கங்களையும் உள்ளடக்கியதாக தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாகவும் ‘கனலி’ இம்முறை வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.