January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பூம்புகார் பகுதியில் கணவனை அடித்து கொலை செய்த மனைவி

யாழ்ப்பாணம் அரியாலை –பூம்புகார் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான துரைராசா செல்வராசா (32) என்பவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி தெற்கை சேர்ந்த இவர், ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்து பூம்புகாரில் வசித்து வருகிறார்.

மேசன் தொழிலில் ஈடுபடும் இவருக்கும் மனைவிக்கும் சில நாட்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையில் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவலைக் கட்டையால் கடுமையாக தாக்கப்பட்ட குடும்பத் தலைவரின் உடலில், 5 இற்கு மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை யாழ்.பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், குறித்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து இன்றைய தினம் (19) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

உயிரிழந்த குறித்த நபரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.