
இணையத்தளத்தில் ஆபாச காணொளிகளை பதிவேற்றிய சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச காட்சிகள் இணையத்தளத்தில் வெளியிடப்படுபவது தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை கல்கிசை பிரதேசத்தில் சிறுமியொருவரை பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 45 ற்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.