ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒருத்தொகை ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.
இவ்வாறு 120,000 தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
‘ஸ்புட்னிக்-வி’தடுப்பூசியை முதல் டோஸாக பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸை வழங்குவதற்கு இன்று கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் சனத்தொகையில் 50 வீதமானோருக்கு இதுவரையில் முழுமையாக கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.