May 24, 2025 8:37:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்புக்கு பின்னர் 45 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கி வெள்ளிக்கிழமை (17) 45.95 பில்லியன் ரூபா பணம் அச்சிட்டுள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக அவரது கையொப்பத்துடன் இந்த பணம் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை,வெள்ளிக்கிழமை வணிக வங்கிகள்,மத்திய வங்கியிலிருந்து 28.81 பில்லியன் கடனை பெற்றுக் கொண்டுள்ளன.