January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டம்!

விரைவில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறையுடன் இணைந்து இதற்கான திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

தற்போது வரை, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி மற்றும் கல்வி சாரா துறைகளில் 30 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு, 30 வயதிற்குட்பட்ட மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அந்தந்த மாவட்டங்களின் சுகாதார பிரிவுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

2021 ஆம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.