அடுத்த வாரம் முதல் 17,000 தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்க போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு இவ்வாறு நிவாரணப் பொதி வழங்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
டயர்கள், மசகு எண்ணெய், டீசல், பேட்டரிகள், வாகன உதிரி பாகங்கள் உள்ளடங்கலாக குறிப்பிட்ட மதிப்புள்ள பண வவுச்சர்கள் நிவாரண பொதியில் அடங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த நிவாரண பொதியில் பஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணத் தொகையும் நிவாரணமாக வழக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.