இந்தியாவின் உதவியின் கீழ் மேலும் 40 அதிநவீன பயணிகள் ரயில் பெட்டிகள் புகையிரதத் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
நேற்று 20 ரயில் பெட்டிகள் நாட்டை வந்தடைந்த நிலயில், மேலும் 20 ரயில் பெட்டிகளை எடுத்து வருவதற்காக கப்பல் இந்தியாவுக்கு பயணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியா இலங்கைக்கு 160 பயணிகள் ரயில் பெட்டிகளை வழங்குவதாக 2019 செப்டம்பரில் கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு அமைய இந்த 20 ரயில் பெட்டிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
Momentum of 🇮🇳🇱🇰cooperation in the transport sector continues with arrival of 20 more state-of-the-art railway passenger coaches at Colombo Port today. pic.twitter.com/rKTwg7bJLB
— India in Sri Lanka (@IndiainSL) September 17, 2021
முன்னதாக, இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு சந்தர்ப்பங்களில் 30 ரயில் பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய இந்த பயணிகள் பெட்டிகளில் வெளிப்புற ஓவியம் தீட்டப்பட்டுள்ளதோடு, கடுமையான கடலோர வானிலைகள் காரணமாக துருப்பிடிக்காத வண்ணப்பூச்சுகள் பூசப்பட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.