June 18, 2025 0:44:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகிறார் மகிந்த சமரசிங்க

களுத்துறை மாவட்ட ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக அவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றிய ரவிநாத் ஆரியசிங்க வெளியுறவு சேவையில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, மகிந்த சமரசிங்க நியமிக்கப்படவுள்ளார்.

இதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய மகிந்த சமரசிங்க முன்வந்துள்ளார்.