May 28, 2025 10:51:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் சனத்தொகையில் 50 விகிதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது

vaccination New Image

இலங்கையின் சனத்தொகையில் 50 விகிதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மொத்தமாக 10,968,195 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

8,973,670 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியும், 949,105 பேருக்கு அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியும், 758,282 பேருக்கு மொடர்னாவும், 243,685 பேருக்கு பைசரும், 43,453 பேருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கும் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.