July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை கடந்தது!

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்து பதிவாகியுள்ளதாக தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) 2078 கொரோனா தொற்றுக்கள் நாட்டில் பதிவாகியதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 500,772 ஆகும்.

இதனிடையே, இலங்கையில் இன்று மேலும் 121 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,938 ஆக உயர்ந்துள்ளது.

அத்தோடு நாட்டில் கொவிட் தொற்று காரணமாக 59,058 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொற்றுக்குள்ளான 429,776 பேர் குணமடைந்துள்ளனர்.