June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“செயற்கை நுண்ணறிவால் மனித உரிமைகளுக்கான ஆபத்து”: ஐநா எச்சரிக்கை!

Photo : un.org

செயற்கை நுண்ணறிவு மனித உரிமைகளுக்கு அதிக ஆபத்து என்பதால் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் கடுமையானதாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஜூலையின் சர்ச்சை ஏற்படுத்திய பெகாசஸ் உளவு விவகாரத்துக்கு பின்னரான தாக்கங்கள் குறித்து ஐரோப்பிய ஆணையத்தின் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“இந்த தொழில்நுட்பத்தால் மனித உரிமைகளுக்கு ஏற்படும் அபாயங்களை மதிப்பீடு செய்து தீர்வு காண காலங்கள் எடுக்கலாம் என்பதனால், செயற்கை நுண்ணறிவு தொடர்பில் அவசர நடவடிக்கை தேவையாக உள்ளது என அவர் இதன் போது வலிறுயுத்தியுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க பயன்படுத்த முடியாத செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சில பெரிய சவால்களை சமாளிக்க சமூகங்களுக்கு உதவுகிற போதிலும், அதனை கவனமின்றி பயன்படுத்தினால் எதிர்மறையான பேரழிவுக்கு காரணமான அமையலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த பிரபலங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் கண்காணிப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ குழுமத்தால் உருவாக்கப்பட்டு வணிகமயமாக்கப்பட்ட பெகாசஸ்  ஸ்பைவேர் 45 நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களை பாதித்ததுள்ளதாகவும் ஐநா அறிக்கை தெரிவிக்கின்றது.