மின் கட்டணங்களை செலுத்துவதற்கான நிவாரண காலத்தை மேலும் நீடிக்க முடியாது என மின்சக்தி அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.
44 பில்லியன் ரூபா வரையான மின் கட்டண தொகை செலுத்தப்படாது, நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அதன் காரணமாக இலங்கை மின்சார சபை பெரும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அந்த மின் கட்டணங்களை கண்டிப்பாக அறவிட வேண்டிய நிலையில் மின்சார சபை இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள அவர், இந்த மாதமும் மின்சாரம் துண்டிக்கப்படாது என்பதுடன், செலுத்தப்படாத மின்கட்டணங்களுக்கு வரி அறவிடப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், மின்கட்டணங்களை செலுத்தத் தகுதியுள்ளவர்களும் அதனை செலுத்தத் தவறியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் நிவாரண காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்தால், இலங்கை மின்சார சபை மேலும் கடுமையான நெறுக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.