May 31, 2025 23:37:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“லொஹான் ரத்வத்த அரசியல்வாதிகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்”: விமல் வீரவன்ச

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அரசியல்வாதிகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

லொஹான் ரத்வத்த சம்பந்தப்பட்டதாக கூறப்படும் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை சம்பவத்தை தொடர்ந்து, அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததன் மூலம் அரசியல் கலாச்சாரத்திற்கு ஒரு முன்மாதிரியானது என்று வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்கள் தவறு செய்வது இயல்பானது, ஆனால் அவர்களின் தவறுகளை ஒப்புக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது என அமைச்சர் விமல் வீரவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது தவறை ஒப்புக் கொண்டு, தமது பதவியை இராஜனாமா செய்துள்ளதாகவும் அமைச்சர் வீரவன்ச கூறியுள்ளார்.

“இது போன்ற சம்பவங்கள் நமது அரசியல் வரலாற்றில் மிகவும் அரிதானவை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.