
இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளை விற்பனை செய்வதற்காக இணையத்தளமொன்றை நடத்தி வந்த மற்றுமொரு சந்தேகநபர் நபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்தமை மற்றும் அதுதொடர்பில் இணையத்தளங்களில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, குறித்த விசாரணைகள் மூலம் தெரியவந்த தகவல்களுக்கமைய நேற்றைய தினத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இரத்தினபுரி – கலவான பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு இணையத்தளமொன்றை நடத்தி வந்த உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்கு இணைய வழியாக ஈடுபடுத்திய மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.