சிறுமி ஹிஷாலி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோருக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய போது தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்திருந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்ன வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிறுமி ஹிஷாலினி, தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது ஜூலை 15 ஆம் திகதி உயிரிழந்தார்.
இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார், மற்றும் தரகர் ஆகியோர் ஜூலை 23 அன்று கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை சிறுமியின் மரண விடயம் தொடர்பான வழக்கில் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தரகருக்கும், ரிஷாட் பதியுதீனின் மைத்துனரும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து இன்றை தினத்தில் ரிஷாட்டின் மனைவிக்கும் மாமனாருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.