File Photo
ஜெனிவா பேச்சுவார்த்தையில் எமக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் இணைப்பாளரான மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு தீர்வு தேவை. காணாமல் போனோரின் தாய்மார்கள் சுமார் 1500 நாட்களாக வீதியில் போராடி வருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், இந்தப் போராட்டங்கள் நீதிக்கானதே தவிர, நிதிக்கானது அல்ல என்றும் கூறினார்.
எவ்வாறாயினும் நாங்கள் இறப்பதற்கு முன் எமது பிள்ளைகளின் நிலை என்ன? என்று எமக்கு தெரிய வேண்டும். அவர்கள் இருந்தால் அவர்களை விடுதலை செய்ய உதவுங்கள் என்று தான் நாங்கள் இன்று உலக நாடுகளிடம் கேட்கின்றோம்.
இலங்கை இராணுவத்தையோ அல்லது அரசாங்கத்தையோ நாங்கள் நம்பவில்லை. எங்களுக்கு சர்வதேசம் ஒரு நல்ல பதிலை வழங்க வேண்டும் என மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். கோரிக்கை விடுத்தார்.