January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலை. மருத்துவப் பீடத்திற்கு பழைய மாணவர்களின் உதவியில் தகவல் தொழில்நுட்ப கூடம்

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் அமெரிக்காவில் வசிக்கும் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன்,   யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான தகவல் தொழில்நுட்பக் கூடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடாதிபதி வைத்தியக் கலாநிதி இ. சுரேந்திரகுமாரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, தகவல் தொழில்நுட்ப கூடத்தைத் திறந்து வைத்தார்.

மேலும், முன்னாள் மருத்துவ பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ். ரவிராஜ், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், முன்னாள் மாணவர்கள் உட்படப் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாட்டின் தற்போதைய கொவிட் 19 சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

 

This slideshow requires JavaScript.