January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்னுமொருவர் கைது!

கொழும்பு, நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்னுமொரு சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 18 துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலையின் கழிப்பறையொன்றிலிருந்து கடந்த 14 ஆம் திகதி கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் முதலில் திருகோணமலை உப்புவெளி பகுதியை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு நேற்றைய தினம் இன்னுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைக்குண்டு நுளம்பு சுருளின் உதவியுடன் வெடிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அந்த கைக்குண்டுகள் தொடர்பில் சந்தேக நபர்களே அங்கிருந்த பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாகவும், பணப் பரிசை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவர்கள் அந்த செயற்பாட்டை முன்னெடுத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.