இலங்கைக்கு ஒருதொகை ‘சினோவெக்’ கொவிட் தடுப்பூசிகளை நன்கொடையாய வழங்குவதற்கு சீனா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஒரு மில்லியன் டோஸ் சினோவெக் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சினோவெக் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகளில் ஒன்றாகும்.
இதன்படி கடந்த ஆகஸ்ட் இறுதி வரையில் சுமார் 50 நாடுகளினால் 1.8 பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் 1.4 பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தனது தடுப்பூசி வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக இந்தத் தடுப்பூசிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
China decides to donate one million doses of Sinovac COVID-19 vaccine to Sri Lanka for further expansion of its vaccination drive.#Sinovac is world's most used vaccine, with 1.8 billion doses supplied & 1.4 bln jabbed in 50 countries by the end of August.
🐼🦁💉#TogetherWeCan pic.twitter.com/k11crk6xls
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) September 16, 2021