
எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகளை துரிதப்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான பி.சி.ஆர்.பரிசோதனைகளை முன்னெடுத்தே ஆக வேண்டும்.இப்போது ஒரு இடத்தில் நாம் தவறிழைத்தால் அடுத்த நெருக்கடிக்குள் நாம் வீழ்வோம்.வைரஸ் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் வேலைதிட்டடம் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வரப்போகும் விடையமல்ல என இலங்கை வைத்தியர்கள் சங்கக்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடு,தனிமைப்படுத்தல் ஊரடங்கு என கூறிவிட்டு வழங்க வேண்டியதற்கும் அதிகளவான அனுமதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.வைரஸ் என்பது இரண்டு அணிகளுக்கு இடையில் இடம்பெறும் யுத்தம் அல்ல,அதனை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையில் இறுக்கமான கட்டுப்பாட்டை பிறப்பிக்க வேண்டும்.அதேபோல் வீடுகளில் இருந்து எவரும் அனாவசியமாக வெளியேறும் வாய்ப்புகளை கொடுக்கவே கூடாது. வைரஸ் பரவக்கூடிய பிரதான சாதகத் தன்மைகளை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.கட்டுப்படுத்தும் வேலையை பாதுகாப்பு தரப்பு செய்ய வேண்டும்.அதேபோல் மக்களும் நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும்.
அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் எவ்வாறு செயற்படுவது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளை கையாண்டால் இலகுவாக எம்மால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்.ஆனால் இதனை முழுமையாக இப்போது ஒழித்துவிட முடியாது.பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட பின்னரே வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதனை மறுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.