2021 வருட இறுதியில் இலங்கையின் பொருளாதாரத்தில் 5 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 2021 ஆண்டு அரையாண்டில் 12.3 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நிறைவடைந்து, பயணக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட பின்னர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 5 சவீதத்தைக் காட்டும் என்று ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.