பிரிட்டனின் நிதியுதவியில் இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் தொகையொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் நிதியுதவியைக் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் நிறுவனம் ஆகியன இந்த உபகரணங்களை இலங்கைக்கு கையளித்துள்ளன.
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக பிரிட்டன் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 11 மகப்பேறியல் மருத்துவமனைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைக் கட்டில்களும் வழங்கப்படவுள்ளதாக பிரிட்டன் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.