ஜிஎஸ்பி வரிச் சலுகையை நீடிப்பது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளதாக வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி வரிச் சலுகையை நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது.
இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பல்வேறு தரப்பினரைச் சந்திக்கவுள்ளதாகவும் வெளியுறவு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வருகின்றது.