January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பரீட்சைக்கான விண்ணப்ப கால அவகாசம் நிறைவு: பாடசாலைகள் பல விண்ணப்பிக்கவில்லை

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2,938 விண்ணப்பங்களும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 6,835 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, 2021 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் நேற்று (15) நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில், விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் இனி நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித தெரிவித்துள்ளார்.

இதில் தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக நேற்று வரை 6,835 பாடசாலைகளிடமிருந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2,339 பாடசாலைகளில் இருந்து இதுவரை விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்தர பரீட்சைக்காக 2,938 பாடசாலைகள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், 338 பாடசாலைகளிலிருந்து இதுவரை விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு பெறும் வரை பரீட்சைகளுக்காக விண்ணப்பங்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என ஆசிரியர் – அதிபர்களின் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.