July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கனிய எண்ணெய் வளம் தொடர்பில் விமானம் மூலம் தரவுகள் சேகரிப்பு!

மன்னார் கடற்பரப்பில் கனிய எண்ணெய் வளம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்தப் பகுதியில் 267 பில்லியன் டொலர் பெறுமதியான, 2000 மில்லியன் பீப்பாய்கள் அளவிலான கனிய வளம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமை கனிய எண்ணெய் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய வரைப்படத்திற்கு அமைய தரவுகளை சேகரிப்பதற்காக விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முதற்தடவையாக நேற்றைய தினத்தில் விமானமொன்றின் மூலம் குறிப்பிட்டப் பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனம் மூலம் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டில் கனிய எண்ணெய் காணப்படக்கூடிய பகுதிகள் 20 ஆக பிரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு பகுதியை தனியார் நிறுவனமொன்று நீண்டகாலம் ஆய்வு செய்வதாகவும், அதற்காக அதிக பணம் செலவிடப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் குறித்த 20 பெரும்பகுதிகளையும் 837 அலகாக பிரித்து புதிய வரைபடத்தை தயாரித்துள்ளதாகவும் இதற்கமைய ஆய்வுகளை விமானங்கள் மூலம் ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.