May 25, 2025 14:41:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 4 ஜி சமிக்ஞை கோபுரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை!

இலங்கையில் 4 ஜி (4G) தொலைத்தொடர்பாடல் சமிக்ஞை கோபுரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கையெடுத்துள்ளது.

அனைத்து பிரதேசங்களுக்கும் வேகமான இணைய வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், 4 ஜி சமிக்ஞை கிடைக்காத பிரதேசங்களை அடையாளம் கண்டு அங்கு அதற்கான கோபுரங்களை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்திற்கான தொடர்பாடல் திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க கூறியுள்ளார்.

இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் 37 சமிக்ஞை கோபுரங்களும், குருநாகல் மாவட்டத்தில் 47 சமிக்ஞை கோபுரங்களும், மாத்தறையில் 23 கோபுரங்களும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

அத்துடன் அநுராதபுரம், கண்டி, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் 4 ஜி வசதிகளற்ற பகுதிகளை கண்டறிந்து , தேவையான சமிக்ஞை கோபுரங்களை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஓஷத சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.