May 29, 2025 6:49:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க அனுராதபுரம் செல்கிறார் நாமல் ராஜபக்‌ஷ

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இன்று அனுராதபுரம் செல்வதாக தெரியவருகிறது.

அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் நாமலுடன் சந்திப்பொன்றைக் கேட்டுள்ளனர்.

அவர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்து, அமைச்சரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய அமைச்சர் நாமல் இன்று அனுராதபுரம் செல்வதாக தெரியவருகிறது.

அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.