July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மயில்களின் வருகையால் மகிழ்ச்சியடையும் விவசாயிகள்!

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக செய்கை ஆரம்பமாக உள்ள நிலையில், விவசாய நிலங்களில் மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மக்களால் கைவிடப்பட்டுள்ள வெற்றுக்காணிகள், வயல் வெளிகளில் உள்ள பாம்புகள் மற்றும் விசப்பூச்சிகளின் தொல்லை மயில்களின் வருகையினால் குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக விதைப்பு காலங்களில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் இப்பகுதிக்கு எண்ணிக்கையற்ற மயில் கூட்டங்களின் வருகையால் விஷ ஜந்துக்கள் குறைவடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஒலுவில், அட்டாளைச்சேனை, மத்தியமுகாம், நாவிதன்வெளி, சவளக்கடை, சம்மாந்துறை பகுதிகளில் மயில்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

This slideshow requires JavaScript.